ஸ்ரீமத் பகவத் கீதை - 108 முக்கியமான ஸ்லோகங்கள் - பக்தி யோகம் (2024)

9.26 to 18.78 ஸ்லோகங்கள் இங்கு

1.1

த்ருதராஷ்ட்ர உவாச

தர்ம~க்ஷேத்ரே குரு-க்ஷேத்க்ஷர
ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவஷ் சைவ
கிம அகுர்வத சஞ்ஜய

திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர் ?

2.7

கார்பண்ய–தோ ஷோ பஹத-ஸ் வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:
யச் ச் ரேய: ஸ்யான் நிஷ் சிதம் ப் ரூஹி தன் மே
ஷிஷ் யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்

இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளைகயெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாகக் கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்றேன். இப்போது உம்மிடம் சரணசடந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.

2.11

ஸ்ரீ-பகவான் உவாச
அஷோச்யான் அன்வஷோ சஸ் த்வம் ப்ரக்ஞா-வாதா ம்ஸ் ச பாஷஸே
கதாஸூன் அக தாஸூம்ஷ் ச நானுக்ஷஷாசந்தி பண் டிதா:

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப்
போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ
கவசலப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ,
மாண் டவர்களுக்காகக்ஷவோ வருந்துவதில்லை.

2.12

ந த்வேவாஹம் ஜாது நாஸம்
ந த்வம் நேமே ஜனாதி பா:
ந சைவ ந ப விஷ்யாம:
ஸர்வே வயம் அத: பரம்


நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

2.13

தேஹினோ (அ)ஸ்மின் யதா தே ஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
தீ ரஸ் தத்ர ந முஹ் யதி


தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை
என்று கடந்துசெல்வதைப் போல,
ஆத்மா, மரணத்தின் போது வேறு
உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர்
இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

2.14

மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய
ஷீ தோஷ்ண-ஸுக -து:க-தா:
ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்
தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத


குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற
தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும்
குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப்
போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை
எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால்
பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக்கொள்.

2.20

ந ஜாயதே ம்ரியதே வா கதாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஷாஷ்வதோ (அ)யம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே


ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.

2.22

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி


பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.

2.23

நைனம் சிந்தந்தி ஷஸ்த்ராணி
நைநம் தஹதி பாவக:
ந சைனம் க்லேத யந்த்-யாபோ
ந ஷோஷயதி மாருத:


ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.

2.27

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி


பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.

2.30

தேஹி நித்யம் அவத்யோ (அ)யம்
தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதானி
ந த்வம் ஷோசிதும் அர்ஹஸி

பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.

2.40

நேஹாபி க்ரம– நாஷோ (அ)ஸ்தி
ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்


இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

2.41

வ்யவஸாயாத்மிகா புத்திர்
ஏகேஹ குரு-நந்தன
பஹு-ஷாகா ஹ்யனந்தாஷ் ச
புத்தயோ (அ)வ்யஸாயினாம்

இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.

2.44

போகைஷ்வர்ய-ப்ரஸக்தானம்
தயாபஹ்ருத–சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி:
ஸமாதௌ ந விதீயதே

புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.

2.45

த்ரை-குண்ய-விஷயா வேதா
நிஸ்த்ரை-குண்யோ பவார்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய-ஸத்த்வ-ஸ்தோ
நிர்யோக-க்ஷேம ஆத்மவான்

வேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.

2.46

யாவான் அர்த உதபானே
ஸர்வத ஸம்ப்லுதோதகே
தாவான் ஸர்வேஷு வேதேஷு
ப்ராஹ்மணஸ்ய விஜானத:

சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.

2.59

விஷயா வினிவர்தந்தே
நிராஹாரஸ்ய தேஹின:
ரஸ-வர்ஜம் ரஸோ (அ)ப்யஸ்ய
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே

உடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.

2.62

த்யாயதோ விஷயான் பும்ஸ:
ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:
காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே


புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.

2.63

க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ
புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி

கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.

2.64

ராக–த்வேஷ-விமுக்தைஸ் து
விஷயான் இந்த்ரியைஷ் சரன்
ஆத்ம-வஷ்யைர் விதேயாத்மா
ப்ரஸாதம் அதி கச்சதி

எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.

2.69

யா நிஷா ஸர்வ பூதானாம்
தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி
ஸா நிஷா பஷ்யதோ முனே:

எல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.

3.9

யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர
லோகோ (அ)யம் கர்ம-பந்தன:
தத் அர்தம் கர்ம கௌந்தேய
முக்த-ஸங்க: ஸமாசர

விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.

3.14

அன்னாத் பவந்தி பூதானி
பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ
யக்ஞ: கர்ம-ஸமுத்பவ:

மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப் படுகின்றன.

3.21

யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ்
தத் தத் ஏவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாணம் குருதே
லோகஸ் தத் அனுவர்ததே

பெரிய மனிதன் எத்தகைய செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் செயல்களால் எந்தத் தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது.

3.27

ப்ரக்ருதே: க்ரியமாணானி
குணை: கர்மாணி ஸர்வஷ:
அஹங்கார–விமூடாத்மா
கர்தாஹம் இதி மன்யதே

அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா, பௌதிக இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே கர்த்தா என்று எண்ணிக் கொள்கிறான்.

3.37

ஸ்ரீ-பகவான் உவாச
காம ஏஷ க்ரோத ஏஷ
ரஜோ-குண-ஸமுத்பவ:
மஹாஷனோ மஹா-பாப்மா
வித்த்-யேனம் இஹ வைரிணம்

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.

4.1

ஸ்ரீ-பகவான் உவாச
இமம் விவஸ்வதே யோகம்
ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ
மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்

புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.

4.2

ஏவம் பரம்பரா-ப்ராப்தம்
இமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேனேஹ மஹதா
யோகோ நஷ்ட: பரந்தப

உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப்போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகின்றது.

4.3

ஸ ஏவாயம் மயா தே (அ)த்ய
யோக: ப்ரோக்த: புராதன:
பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி
ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம்

பரமனுடன் உறவு கொள்வதைப் பற்றிய அதே பழம்பெரும் விஞ்ஞானத்தை நான் இன்று உனக்கு எடுத்துரைத்துள்ளேன்; ஏனெனில், நீ எனது பக்தனும் நண்பனுமாதலால் இந்த விஞ்ஞானத்தின் உத்தம இரகசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.

4.6

அஜோ (அ) பி ஸன்ன் அவ்யயாத்மா
பூதானாம் ஈஷ்வரோ (அ)பி ஸன்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாம்-யாத்ம-மாயயா

நான் பிறப்பற்றவனாக இருந்தாலும், எனது திவ்யமான உடல் அழிவற்றதாக இருந்தாலும், உயிர்வாழிகள் அனைவருக்கும் நானே இறைவனாக இருந்தாலும், நான் எனது சுயமான திவ்ய உருவில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன்.

4.7

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்-யஹம்

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, பரத குலத் தோன்றலே, அப்போதெல்லாம் நான் தோன்றுகின்றேன்.

4.8

பரித்ராணாய ஸாதூனாம்
வினாஷாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸதாபனார்தாய
ஸம்பவாமி யுகே யுகே

பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழித்து, தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைத்துவதற்காக, நானே யுகந்தோறும் தோன்றுகிறேன்.

4.9

ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ (அ)ர்ஜுன

எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.

4.10

வீத-ராக-பய-க்ரோதா
மன் மயா மாம் உபாஷ்ரிதா:
பஹவோ க்ஞான-தபஸா
பூதா மத்-பாவம் ஆகதா:

பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு, முழுதும் என்னில்லயித்து, என்னை சரணடைந்த பற்பல நபர்கள் என்னைப் பற்றிய அறிவால் இதற்கு முன் தூய்மையடைந்துள்ளனர். இவ்வாறாக, அவர்கள் எல்லாரும் என் மீது திவ்யமான அன்புடையவர்களாயினர்.

4.11

யே யதா மாம் ப்ரபத்யந்தே
தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்
மம வர்த்மானுவர்தந்தே
மனுஷ்யா: பார்த ஸர்வஷ:

என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற் போல, நான் அனைவருக்கும் பலனளிக்கின்றேன். பிருதாவின் மகனே, எல்லா விதத்திலும் அனைவரும் என் வழியையே பின்பற்றுகின்றனர்.

4.13

சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம்
வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்

மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக அறிந்துகொள்.

4.34

தத்வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே க்ஞானம்
க்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:

ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.

5.18

வித்யா-வினய-ஸம்பன்னே
ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகே ச
பண்டிதா: ஸம-தர்ஷின:

அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.

5.22

யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகா
து: க-யோனய ஏவ தே
ஆத்-யந்தவந்த: கௌந்தேய
ந தேஷு ரமதே புத:

ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.

5.29

போக்தாரம் யக்ஞ-தபஸாம்
ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்
க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி

நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.

6.17

யுக்தாஹார-விஹாரஸ்ய
யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய
யோகோ பவதி து: க-ஹா

உண்ணுதல், உறங்குதல், உழைத்தல், கேளிக்கை ஆகிய பழக்கங்களை நெறிப்படுத்தியவன், யோகப் பயிற்சியின் மூலமாக எல்லாத் துன்பங்களையும் பெருமளவில் நீக்கிவிட முடியும்.

6.41

ப்ராப்ய புண்ய-க்ருதாம் லோகான்
உஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:
ஷுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே
யோக-ப்ரஷ்டோ (அ)பிஜாயதே

வெற்றியடையாத யோகி, புண்ணிய ஆத்மாக்களின் லோகங்களில் பற்பல வருடங்கள் அனுபவித்தபின், நல்லோரின் குடும்பத்தில், அல்லது பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறக்கின்றான்.

6.47

யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்-கதேனாந்தர்-ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:

மேலும், எல்லா யோகிகளுக்கு மத்தியில், எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை எண்ணி, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் மிகவும் நெருங்கியவனும் எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான். இதுவே எனது அபிப்பிராயம்.

7.3

மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு
கஷ்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தானாம்
கஷ்சின் மாம் வேத்தி தத்த்வத:

ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில் கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.

7.4

பூமிர் ஆபோ (அ)னலோ வாயு:
கம் மனோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மே
பின்னா ப்ரக்ருதிர் அஷ்டதா

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.

7.5

அபரேயம்இதஸ் த்வன்யாம்
ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவ-பூதாம் மஹா-பாஹோ
யயேதம் தார்யதே ஜகத்

பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.

7.7

மத்த: பரதரம் நான்யத்
கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய
மயி ஸ்ர்வம் இதம் ப்ரோதம்
ஸூத்ரே மணி-கணா இவ

செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.

7.14

தைவீ ஹ்யேஷா குண—மயீ
மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே

ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.

7.15

ந மாம் துஷ்க்ருதினோ மூடா
ப்ரபத் யந்தே நராத மா:
மாயயாபஹ்ருத-க்ஞானா
ஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா:

சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடையவதில்லை.

7.16

சதுர்-விதா பஜந்தே மாம்
ஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ
க்ஞானி ச பரதர்ஷப

பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

7.19

பஹூனாம் ஜன்மனாம் அந்தே
க்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸு-துர்லப:

பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.

7.25

நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய
யோக-மாயா-ஸமாவ்ருத:
மூடோ (அ)யம் நாபிஜானாதி
லோகோ மாம் அஜம் அவ்யயம்

சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.

7.26

வேதாஹம் ஸமதீதானி
வர்தமானானி சார்ஜுன
பவிஷ்யாணி ச பூதானி
மாம் து வேத ந கஷ்சன

அர்ஜுனா, முழுமுதற் கடவுளான நான், கடந்த காலத்தில் நடந்தவை, தற்போது நடப்பவை, இனி நடக்க போகின்றவை அனைத்தையும் அறிவேன். நான் எல்லா ஜீவாத்மாக்களையும் நன்கறிவேன், ஆனால் என்னை அறிந்தவர் யாருமில்லை.

7.27

இச்சா-த்வேஷ-ஸமுத்தேன
த்வந்த்வ-மோஹேன பாரத
ஸர்வ-பூதானி ஸம்மோஹம்
ஸர்கே யாந்தி பரந்தப

பரத குலத் தோன்றலே, எதிரிகளை வெல்வோனே, விருப்பு வெறுப்பினால் உண்டான இருமைகளில் மயங்கியுள்ள எல்லா உயிர்வாழிகளும், மிகுந்த குழப்பதுடன் பிறந்துள்ளனர்

7.28

யேஷாம் த்வந்த-கதம் பாபம்
ஜனானாம் புண்ய-கர்மணாம்
தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா
பஜந்தே மாம் த்ருட-வ்ரதா

முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.

8.5

அந்த-காலே ச மாம் ஏவ
ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்-பாவம்
யாதி நாஸ்த்-யத்ர ஸம்ஷய:

மேலும், தனது வாழ்வின் இறுதி காலத்தில், யாராவது என்னை மட்டும் எண்ணிக் கொண்டு உடலை விட்டால், உடனடியாக அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

8.6

யம் யம் வாபி ஸ்மரன் பாவம்
தய்ஜத்-யந்தே கலேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய
ஸதா தத்-பாவ-பாவித:

ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன்அடைகிறான்.

8.14

அனன்யா-சேதா ஸததம்
யோ மாம் ஸ்மரதி நித்யஷ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த
நித்ய-யுக்தஸ்ய யோகின:

பிருதாவின் மகனே, பிறழாத மனதுடன் என்னை எப்போதும் நினைப்பவன், சுலபமாக என்னை அடைகிறான்; ஏனெனில், அவன் பக்தித் தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளான்.

8.15

மாம் உபேத்ய புனர் ஜன்ம
து: காலயம்-அஷாஷ்வதம்
நாப்னுவந்தி மஹாத்மான:
ஸம்ஸித்திம் பரமாம் கதா:

பக்தியில் யோகிகளான மகாத்மாக்கள் என்னை அடைந்த பிறகு, முற்றிலும் துன்பம் நிறைந்த இந்த தற்காலிகமான உலகத்திற்குத் திரும்பி வருவதே இல்லை, ஏனெனில், அவர்கள் மிகவுயர்ந்த பக்குவத்தை அடைந்துவிட்டனர்.

8.16

ஆ-ப்ரஹ்ம-புவனால் லோகா:
புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன
மாம் உபேத்ய து கௌந்தேய
புனர் ஜன்ம ந வித்யதே

ஜடவுலகின் மிகவுயர்ந்த லோகத்திலிருந்து மிகவும் தாழ்ந்த லோகம் வரை, அனைத்தும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடைபெறும் துன்பம் நிறைந்த இடங்களே. ஆனால் குந்தியின் மகனே, என்னுடைய இடத்தை அடைபவன் என்றும் மறுபிறவி எடுப்பதில்லை.

8.28

வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ
தானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்
அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்

பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.

9.2

ராஜ-வித்யா ராஜ-குஹ்யம்
பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம்
ஸு ஸுகம் கர்தும் அவ்யயம்

இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றப்படுவதும் ஆகும்.

9.4

மயா ததம் இதம் ஸர்வம்
ஜகத் அவ்யக்த-மூர்தினா
மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி
ந சாஹம் தேஷ்-வவஸ்தி த:


நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன்; ஆனால் அவர்களில் நான் இல்லை.

9.10

மயாத்யக்ஷேண ப்ரக்ருதி:
ஸூயதே ஸ-சராசரம்
ஹேதுனாநேன கௌந்தேய
ஜகத் விபரிவர்ததே

குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.

9.11

அவஜானந்தி மாம் மூடா
மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ
மம பூத-மஹேஷ்வரம்

மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.

9.12

மோகாஷா மோக-கர்மாணோ
மோக-க்ஞானா விசேதஸ:
ராக்ஷஸீம் ஆஸுரீம் சைவ
ப்ரக்ருதிம் மோஹினீம் ஷ்ரிதா:

இவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமாக கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்படுகின்றனர். அத்தகு மயங்கிய நிலையில், அவர்களது முக்திக்கான ஆவல்கள், பலன் நோக்குச் செயல்கள், அறிவுப் பயிற்சிகள் ஆகிய அனைத்தும் தோல்வியடைகின்றன.

9.13

மஹாத்மானஸ் து மாம் பார்த
தைவீம் ப்ரக்ருதிம் ஆஷ்ரிதா:
பஜந்த்-யனன்ய-மனஸோ
க்ஞாத்வா பூதாதிம் அவ்யயம்

பிருதாவின் மகனே, குழப்பமடையாத மகாத்மாக்களோ தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள், பரம புருஷ பகவானான என்னை, ஆதிபுருஷனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து, எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.

9.14

ஸததம் கீர்தயந்தோ மாம்
யதந்தஷ் சத்ருட-வ்ரதா
நமஸ்யந்தஷ் ச மாம் பக்தயா
நித்ய-யுக்தா உபாஸதே

எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.

9.22

அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்
யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம்
யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்

ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.

9.25

யாந்தி தேவ-வ்ரதா தேவான்
பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா:
பூதானி யாந்தி பூதேஜ்யா
யாந்தி மத்-யாஜினோ (அ)பி மாம்

தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பவர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.

மேலும் ஸ்லோகங்களுக்கு

ஸ்ரீமத் பகவத் கீதை - 108 முக்கியமான ஸ்லோகங்கள் - பக்தி யோகம் (2024)
Top Articles
Latest Posts
Recommended Articles
Article information

Author: Domingo Moore

Last Updated:

Views: 6408

Rating: 4.2 / 5 (53 voted)

Reviews: 84% of readers found this page helpful

Author information

Name: Domingo Moore

Birthday: 1997-05-20

Address: 6485 Kohler Route, Antonioton, VT 77375-0299

Phone: +3213869077934

Job: Sales Analyst

Hobby: Kayaking, Roller skating, Cabaret, Rugby, Homebrewing, Creative writing, amateur radio

Introduction: My name is Domingo Moore, I am a attractive, gorgeous, funny, jolly, spotless, nice, fantastic person who loves writing and wants to share my knowledge and understanding with you.