பகவத் கீதை - முழுவதும் - தமிழில் (2024)


பகவத் கீதை - முழுவதும் - தமிழில் (1)

கிசாரி மோகன் கங்குலியின் பகவத் கீதையை நான் மொழி பெயர்க்க ஆரம்பித்த போது, கங்குலியின் வரிகளைச் சுலோகங்களாகப் பிரித்து அறிந்து கொள்வதற்காக இஸ்கான் வெளியீடான "பகவத் கீதை - உண்மையுருவில்" தெய்வத்திரு.அ.ச.பக்திவேதாந்தசுவாமி பிரபுபாதர் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். வலைத்தளங்களில் தேடிய போது, www.asitis.com பிரபுபாதரின் ஆங்கில உரைகளோடு பகவத்கீதை இருந்தது. இவை இரண்டையும் கொண்டு கங்குலியின் ஆங்கில வரிகளைச் சுலோக எண்களுடன் கூடிய விளக்கங்களாகப் பிரித்தேன். அதன்படியே அவ்விரண்டு ஆக்கங்களையும் துணையாகக் கொண்டு மொழிபெயர்ப்பையும் ஆரம்பித்தேன்.

பகவத்கீதையின் மூன்றாவது பகுதியை மொழிபெயர்த்த போது http://www.sangatham.com/bhagavad_gita/ என்ற வலைத்தளம் கிடைத்தது. அதில் கீதா பிரஸ் வெளியீட்ட, ஸ்ரீஜயதயால் கோயந்தகா அவர்களின் தத்வவிவேசனீயில் இருந்து சம்ஸ்க்ருதப் பதங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுலோகத்தின் கீழே பாரதியாரின் உரையும் இருந்தது. மூன்றாவதாக இந்தத் தளத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன். பகவத் கீதையின் 15வது பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே தொலைத்திருந்த "தத்வவிவேசனீ" கிடைத்தது. நான்காவதாக அதையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன்.

"தத்வவிவேசனீ"யையும், பாரதியாரின் மொழிபெயர்ப்பையும் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் பிரித்து வைத்திருந்த சுலோக எண்கள் ஒரு சில முரண்பட்டன. அதுவும் முதல் அத்தியாயத்திலேயே. நான் சுலோகங்களாகப் முதல் பகுதியில் பிரித்து வைத்திருந்தது 46 சுலோகங்கள் ஆகும். ஆனால் தத்வவிவேசனீ மற்றும் பாரதியாரில் 47 சுலோகங்கள் இருந்தன. சுலோக எண்களில் தத்வவிவேசனீ, பாரதியாரின் மொழிபெயர்ப்பும் ஒன்றாக இருக்கின்றன. மற்றபடி பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் பல ஆங்கிலப் பதிப்புகளில் 46 பகுதிகளே இருக்கின்றன. எனவே, நான் ஆரம்பத்தில் செய்தது போலவே சுலோகப் பிரிப்பில் இஸ்கானின் "பகவத் கீதை - உண்மையுருவில்" புத்தகத்தையே பின்பற்றியிருக்கிறேன்.

700 சுலோகங்களைச் சொல்ல 700 நிமிடம் என்றாலும் கிட்டத்தட்ட 12 மணி நேரம், அதாவது சூரியன் இருப்பதே அவ்வளவு நேரம்தானே. அதற்குள் எப்படி இது பேசப்பட்டிருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கவுரைகள் இல்லாமல் பகவத்கீதையின் வரிகளை மட்டுமே படித்தால், மொத்த பகவத் கீதையுமே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். போரென்றால், போராளிகள் சூரியன் உதிக்கும்போதே தயாராகிவிடுவார்கள். எனவே கிருஷ்ணனும், அர்ஜுனனும் இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே பேசி முடித்திருப்பார்கள். அர்ஜுனனும் முதல் நாள் போருக்கு அன்றே தயாராகியிருப்பான்.

தமிழில், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படித்தால் 3 மணி, 51 நிமிடம், 4 விநாடி நேரம் ஆகிறது. இதையே சம்ஸ்க்ருதத்தில் படித்தால் இதைவிடக் குறைவான நேரமே தேவைப்படும். நமது பதிப்பில், பேசும் பாத்திரத்தால் சொல்லப்படும் பெயர் ஒரு முறையும், அந்தப் பாத்திரத்தின் பிரபலமான பெயர் அடைப்புக்குறிக்குள் மற்றொரு முறையும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, "புருஷரிஷப" என்ற சம்ஸ்க்ருதச் சொல், நம் மொழிபெயர்ப்பில், "ஓ மனிதர்களில் காளையே" என்று ஒரு முறையும், அடைப்புக்குறிக்குள் {அர்ஜுனா} என்று மற்றுமொரு முறையும் சொல்லப்பட்டிருக்கும். மேலும் சில, பல விளக்கங்களும் அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மட்டுமே கூட நேரம் இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கலாம். மொழிபெயர்ப்பைப் படித்து ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் பதிவு செய்த சகோதரி தேவகி ஜெயவேலன் மற்றும் வலையேற்றிய நண்பர் ஜெயவேலன் ஆகியோரின் தன்னலம் கருதாத உழைப்பால், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட முடிந்தது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி, என்னில் இருந்து அவர்களைப் பிரிக்க நான் விரும்பவில்லை.

மூலமொழியின் மொழிநடை 1600 வருடங்கள் முந்தையது என்றும், பகவத் கீதை ஓர் இடைசெருகல் என்றும். சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது குறைந்தது 6000 வருடங்களுக்காவது முந்தையது என்று நம்பப்படுகிறது. புத்தர் பகவத்கீதையைப் பற்றிப் பேசவில்லை எனவே இது புத்தருக்கும் பிந்தையது என்று சிலர் சொல்கிறார்கள். பகவத்கீதையிலோ, மகாபாரதத்திலோ புத்தர் குறித்தோ, பௌத்தம் குறித்தோ பேசப்படவில்லை. அதனால் புத்தருக்கு முந்தையது என்றும் கொள்ளலாமல்லவா? இதைச் சொல்லும்போது, நான் பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

இது கொலை செய்யச் சொல்லும் நூல் தானே என்று ஒருவர் கேட்டார். அவருக்கு நான் பதில் சொல்லவில்லை. இது குழந்தைத் தனமான கேள்வி. பகவத்கீதை அருளப்படும்போது அவர்கள் நின்று கொண்டிருந்தது போர்க்களத்தில். போரில் கொல்வது நீதியாகாதா? கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை? நீதி வெல்லவும், அநீதி அழியவுமே கிருஷ்ணன் இங்கே அவர்களைப் போரிடத் தூண்டுகிறான்.

கர்மயோகத்தின்படி க்ஷத்திரியன் என்றால் போரிட்டே ஆக வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். க்ஷத்திரியர்களே நிலத்தைக் காப்பவர்களாக இருந்தார்கள். இன்றைய இராணுவ வீரரிடம் சென்று நாம் இப்படிப் பேச முடியுமா? பாண்டவர்கள் போரைத் தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். துரியோதனனே போரைத் தூண்டினான். இறுதியாகத்தான் பாண்டவர்கள் போரைக் கைக்கொண்டார்கள். நாட்டைக் காப்பதே இராணுவ வீரனின் தொழில். தன் நாட்டை இழந்தும் அதை மீட்காமல் இருந்த அர்ஜுனனையே கிருஷ்ணன் போருக்குத் தூண்டுகிறான்.

போரிடவில்லை என்றால் உனக்குப் பழி வரும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனை மிரட்டுகிறானே, பழிக்கு அஞ்சி செயல்பட வேண்டுமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இஃது அர்ஜுனனுக்கு உற்சாகமூட்ட சொல்லப்பட்ட வார்த்தை. அர்ஜுனன் போரிடாவிட்டால் நிச்சயம் கோழை என்றே சொல்லப்பட்டிருப்பான். அதன் விளைவு என்ன ஆகியிருக்கும். அவர்களுக்கு நாடும் கிடைக்காமல், ஒன்றும் கிடைக்காமல் அழிவை அடைந்திருப்பார்கள்.

இறந்தால் சொர்க்கம், வென்றால் நாடு என்கிறானே, நாட்டைச் சாக்காகக் கொண்டு பிறரைக் கொல்லலாமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்குப் பதில் கேள்விதான் கேட்க முடியும். ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா? அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா? நாட்டை மீட்க வேண்டும் என்றால் கொல்ல வேண்டியிருக்கிறது வேறு வழியில்லை என்றால் கொன்றுத்தான் ஆகவேண்டும்.

கீதைக்கு விளக்கவுரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் - ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரும், பிற்காலத்தில் பால கங்காதர திலகர், வினோபாவே, காந்தி, அரவிந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சின்மயானந்தர் ஆகியோரும் ஆவர். இதற்குமேலும் கேள்விகளைக் கொண்டிருப்பவர்கள் மேற்கண்டவர்களின் விளக்கவுரைகளையோ, கோயந்தகரின் தத்வவிவேசனீ, பிரபுபாதரின் "பகவத்கீதை உண்மையுருவில்" ஆகியோரின் நூல்களையோ நாடினால் தெளிவு பெற முடியும். நான் இங்கே செய்திருப்பது வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு மட்டுமே. ஆனாலும், முடிந்தவரை உண்மைப் பொருள் மாறாதிருக்கப் பெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். கடினமான சில இடங்களில் அடிக்குறிப்புகளையும் இட்டிருக்கிறேன்.

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.


பொருளடக்கம்

பகுதி
எண்
பகுதியின் தலைப்புகாணொளி சுட்டிஒலி சுட்டிநிமிட
ங்கள்
01அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்12.29
02கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்23.14
03செயலில் அறம் - கர்மயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்13.33
04அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்13.35
05துறவின் அறம் - சந்யாசயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்09.47
06தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்14.28
07பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்09.33
08பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்09.49
09சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்11.23
10தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்13.08
11அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்20.27
12நம்பிக்கையறம் - பக்தி யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்07.08
13பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்12.00
14குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்09.22
15பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்08.12
16தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்07.41
17மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்யூடியூப்MP3 பதிவிறக்கம்10.26
18விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம்!யூடியூப்MP3 பதிவிறக்கம்24.49

மேற்கண்ட பொருளடக்கப் பட்டியிலிலுள்ள
பகுதியின் தலைப்பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்
காணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்
ஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்

பரம்பொருளைக் குறித்த துல்லியமான அடிப்படை அறிவு, உயர்ந்த உண்மை, படைப்பு, பிறப்பு, இறப்பு, செயல்களின் விளைவுகள், நித்தியமான ஆத்மா, விடுதலை {முக்தி, மோட்சம்} மனித இருப்பின் இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளப் பகவத் கீதையில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எனவே நண்பர்களே, கவனத்துடன் பொறுமையாகப் படிப்பீர்களாக...

நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2015, திருவொற்றியூர்

குறிப்பு: பதிவிறக்கத்திற்காகக் கொடுக்கப்படும் பிடிஎப் மற்றும் ஏனைய மின்நூல் வகைகள் இறுதியானவை அல்ல. தவறுகள் உணரப்படும்போதும், சுட்டிக்காட்டப்படும் போதும் எனத் தேவையான போதெல்லாம் பதிவுகள் திருத்தத்திற்குள்ளாகின்றன. எனவே இறுதியான பதிவுகளைப் படிக்க மேற்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆடியோ கோப்பும், வீடியோ கோப்பும் திருத்தப்படுவதில்லை.

Bhagavad Geeta EPUB


பகவத் கீதை - முழுவதும் - தமிழில் (2024)
Top Articles
Latest Posts
Recommended Articles
Article information

Author: Reed Wilderman

Last Updated:

Views: 6406

Rating: 4.1 / 5 (52 voted)

Reviews: 83% of readers found this page helpful

Author information

Name: Reed Wilderman

Birthday: 1992-06-14

Address: 998 Estell Village, Lake Oscarberg, SD 48713-6877

Phone: +21813267449721

Job: Technology Engineer

Hobby: Swimming, Do it yourself, Beekeeping, Lapidary, Cosplaying, Hiking, Graffiti

Introduction: My name is Reed Wilderman, I am a faithful, bright, lucky, adventurous, lively, rich, vast person who loves writing and wants to share my knowledge and understanding with you.